Home » » வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு

Add caption

வட மாகாணத்திலுள்ள மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கே ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாளை காலை ஆறு மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செவ்வாய்க்கிழமை (24ஆம் திகதி) காலை 6 மணி வரை நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலை ஆறு மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டமானது மீண்டும் பகல் இரண்டு மணி முதல் அமுல்படுத்தப்படும்.
மேலும், வடக்கின் குறித்த ஐந்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் தாம் வாழும் மாவட்டத்திலிருந்து வேறு பகுதிகளுக்கு பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சுவிற்சர்லாந்திலிருந்து வந்த மத போதகரொருவர் வட மாகாணத்தில் நடத்திய மத போதனையில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காண்பதற்காக இந்த ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |