Home » » உலக மனித இனத்தை பயமுறுத்தும் கொரோனாவிலிருந்து தப்பித்து கொள்வது எப்படி..?

உலக மனித இனத்தை பயமுறுத்தும் கொரோனாவிலிருந்து தப்பித்து கொள்வது எப்படி..?


உலகத்தையே சமீபகாலமாக விரட்டியடிக்கும் கொரொனா வைரஸ் எனப்படும் வைரஸ் முதலில் சீனர்களையே அச்சுறுத்தும் என்று ஏனைய அனைவரையும் பயப்படுத்தாது ஐயோ சீனாவில் இப்படி நடக்கின்றதே என்ற அனுதாப வார்த்தைகளையே வாயில் முணுமுணுக்க வைத்தது.
ஆனால் என்னமோ கொரொனாவுக்கு உலகத்தில் உள்ள அனைத்து இன மக்களையும் ருசிபார்க்கும் எண்ணம் வந்தது போல உடனே உலகளாவிய ரீதியில் தினம்தினம் அதிகளவுக்கதிகமான மக்களை காவுகொண்டுவருகின்றது.
எங்கு பார்த்தாலும் கொரொனா வைரஸ் வேகமாக தொற்றி மரண எண்ணிக்கையை அதிகரிக்க, அது தொடர்பான செய்திகள் ஒருபுறம் பரவி மக்களை பீதியில் உறைய வைத்திருக்கும் இந்நிலையில் உலக மக்களை வீட்டுக்குள்ளும், உலகத்தையே மூடுற அளவுக்கும் கொரொனா வெற்றிகொண்டுவருகின்றது.
உலக விஞானிகள் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கன்டுபிடிப்பாளர்கள்... என அனைவரையும் தலைகுனிய வைக்கும் அளவுக்கு கொரொனா தலைவிரித்தாடிவரும் இந்நிலையில் கொரொனா என்பது அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை என்று ஒரு காணொளி இணையங்களில் வெளிவந்துள்ளநிலையில் அதை எதிர்கொள்ள நாம் என்ன எல்லாம் செய்யவேண்டும் என்பதை நாம் அனைவரும் பின்பற்றி மற்றவர்களுக்கும் சொல்லி அவர்களையும் முடிந்தளவு குணப்படுத்தவோ, காப்பாற்றவோ முயற்சிக்கலாமே..
இத்தாலியில் ஏன் அதிகமாக மக்கள் மரணத்தை தழுவுகின்றனர் எனில் அங்கு தான்அதிகமாக வயதுமுதிர்ந்தோர் வாழுகின்றதனால் இக்கொரொனவை எதிர்க்கும் சக்தி அவர்கள்உடலில் இல்லை என்பதாலேயே.

எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே நமக்கான ஒரேயொரு சிறந்த மிகமுக்கியமான வழி.
எனவே நோயெதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் பொருட்களை நாம் எம் உடலில் இயற்கை மூலிகைகளைக் கொன்டு அதிகரித்தல் அவசியம்.
கொரோனாவை இயற்கையே எதிர்கொண்டு செழிப்பாக இருக்கும்போது, நமக்கு ஒன்று மட்டும் புரிகின்றது இயற்கை மூலிகைகளால் நாமும் கொரொனவை எதிர்க்கலாம் என.
எனவே நமது சித்தர்கள் முன்னோர்கள் சொன்னதன்படி இயற்கை சித்த மருத்துவத்தையோ மூலிகைகளையோ பின்தொடர்தல்அவசியம்.
தற்போது புலம்பெயர் நாடுகளில் கூட வேற்றினத்தவர்கள் கூட தமிழ் மூலிகைகளையும்தேடுவது கண்கூடாகத் தெரிகின்றது.
எனவே சீனாவில் இருந்து வேகமாகப் பரவி உலகத்தையேஆட்டிப்படைக்கும் ஒட்டுண்ணி நோயான கொரோனவை கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை என்பதைவிட அதி பயம் கொள்ளத் தேவையில்லை.
பண்டைய தமிழர்கள் நமக்கு இதில்இருந்து நம்மை தற்காத்து கொள்ள பல வழிமுறைகளை காட்டி கொடுத்துள்ளனர். அதனைப்பின்பற்றுங்கள். விஞ்ஞானத்தை விஞ்சியது மெஞ்ஞானம் என்பதனை மறவாதீர்கள்.
சின்னஅம்மை பெரியம்மை போன்ற நோய்களை பார்த்து முதலில் நம் மக்கள் அஞ்சினர், பின்னர் அதை தற்காகும் வழிமுறைகளை பின்பற்ற ஆரம்பித்தனர்.
அது போன்றே இக்கொரோனாவையும் பார்த்து அஞ்சாது அனைவருக்கும் தெரிந்தஇயற்கை உணவு பொருட்களை அதிகம் உண்ண வேண்டும் ஏன்னென்றால் அதில் இருந்து நமக்குநோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
வேப்பிலையை சூடு நீரில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கொதிக்கவிட்டு குளிக்கவேண்டும் இதனால் நம் உடம்பில் ஒட்டியிருக்கும் கிருமிகள் உடனே அழிந்து விடும்.
காய்கறிகளை தவிர்க்காமல் தினமும் உணவில் சேர்க்க வேண்டும் அதன் மூலம் நமக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்.
உடல் பயிற்சி தினமும் செய்யவேண்டும்.
உடல்நலம் நன்றாக இருந்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும். அதனால் கொரோனவை விரைவில் விரட்ட முடியும்..
உடலில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பவர்களை வைரஸ் அவ்வளவு எளிதில் தாக்காது என்பதையே அனைவரும் ஆங்கில மருத்துவம் கூட அடிக்கடி இக்காலத்தில் கூறிக்கொண்டே இருக்கின்றது.
அதற்கேற்ப அன்றாட உணவில் வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
நெல்லிக்கனி எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியது.
தினமும் ஒருவேளை எலுமிச்சை சாறு, சமபாதி அளவுநெல்லிச்சாறு கலந்து பழச்சாறாக குடிக்கலாம். இனிப்புக்கு தேன் சேர்த்துகொள்ளலாம். - தேனும் ஒரு அண்டிபயோடிக் தான். ஆனால் நீரிழிவு உள்ளவர்கள் தவிர்த்துவிடுங்கள்.
பழங்கள் அனைத்துமே சத்துமிக்கவை என்பதால் பழங்களையும் குறிப்பாக மஞ்சள் நிறம் கொண்ட பழங்களை உணவின் பின் எடுத்துக்கொள்ளுங்கள்.
கொய்யாபழம் தினமும் சாப்பிடுவது எதிர்ப்புச் சக்தியை மேலும் அதிகரிக்கும்.
இவை தவிர கீரைகள் காய்கறிகளையும் பயன்படுத்துங்கள்.
உணவில் காரத்துக்கு மிளகாயை சேர்க்காமல் மிளகை சேருங்கள்.
கிருமி நாசினியான மஞ்சளை அன்றாடம் சமையலில் சேருங்கள்.
குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் தினமும் பாலில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுப் பொடியை சேர்த்துக் கொடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இப்படி உணவில் தினமும் இஞ்சி, மஞ்சள் தூள்,மிளகு, நெல்லிக்கனி, எலுமிச்சை போன்றவற்றை தவறாமல் சேர்த்துகொள்வது நிச்சயம் வைரஸ் தொற்று உங்களை அண்டாமால் பாதுகாக்கும்.
அதை எதிர்த்துபோராடக்கூடிய எதிர்ப்புச் சக்தியை உங்கள் உடலுக்கு கொண்டு வர இந்த வகை உணவுகள் உதவும்.
நிலவேம்புப் பட்டை அவித்து குடிக்கலாம்
பொதுவாகக் காய்ச்சலுக்கு பயன்படுத்தக்கூடிய நிலவேம்பு காய்ச்சலை மட்டும் விரட்டி அடிக்காமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.
கொரோனா அச்சத்தில் இருப்பவர்கள் வாரம் இருமுறை நிலவேம்பு நீர் குடிக்கலாம்.
இவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடியது.
நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் நிலவேம்பு பொடியை நீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி தினமும் சிறிதளவில் குடிக்கலாம்.
நிலவேம்புத் தண்ணீர் குடித்தால் கொரோனா வைரஸ் குணமாயிடும் என்பது அல்ல. இவை வைரஸை எதிர்த்து போரிடக்கூடியவை என்பதால் உடலை வலுப்படுத்தி கொள்ள நில வேம்பு குடிக்கலாம் என்றுசொல்லப்படுகின்றது.
எனவே எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு வகைகளையும் பாதுகாப்பான சுத்தமான நடவடிக்கைகளையும் அடிக்கடி கவனமாக மேற்கொள்ளும் போது கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாகாது என்பதே உண்மை.
நோய் வரும்முன்னே காப்போமே. வந்தபின்னர் வந்துவிட்டதே என அழுதுபுரளாமல் நமது உடலுக்கு நோயெதிர்ப்புசக்தியை அதிகரித்து நலமோடு வாழ வழிசமைப்போம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |