Home » » கொரோனா வைரஸின் தாக்கம்! முதலாவது குறைந்த வயது மரணம் பதிவானது

கொரோனா வைரஸின் தாக்கம்! முதலாவது குறைந்த வயது மரணம் பதிவானது

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 18 வயது இளைஞன் பலியாகியிருப்பதனையடைந்து, பிரித்தானியாவில் முதல் குறைந்த வயது மரணம் பதிவாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 186 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. சீனாவை விடவும் இத்தாலியில் அதிகளவான மரணங்கள் பதிவாகியிருக்கின்றன.
இந்நிலையில் பிரித்தானியாவில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு தற்போது வரை 281 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் கொவன்றி நகரை சேர்ந்த இளைஞனே இவ்வாறு கொரோனாவிற்கு பலியாகியிருக்கிறான். கொரோனாவால் இதுவரை பிரித்தானியாவில் 5,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் உயிரிழந்தவர்களில் 18 வயது நபர் மிக இளையவர் எனவும், 102 வயது நபர் மிக வயதானவர் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மூன்று வயதிற்கு குறைவானவர்களுக்கும், அதிக வயதுள்ளவர்களுக்குமே கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, 18 வயது இளைஞன் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |