Home » » கொரோனா வைரஸ் தாக்கத்தால் அடங்கியது அமெரிக்கா! சீனாவிடம் தஞ்சமடைந்தார் அமெரிக்க அதிபர்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அடங்கியது அமெரிக்கா! சீனாவிடம் தஞ்சமடைந்தார் அமெரிக்க அதிபர்

தொடர்ச்சியாக சீனா மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வேறு வழியின்றி சீனாவிடம் உதவி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர்,
சீனாவை கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, சீனா வைரஸ் என்று கொரோனா வைரஸை குறிப்பிட்டதுடன், இதற்கு சீனா பதில் சொல்ல வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
அதேபோன்று, மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் சீனாவை சீண்டியிருந்தார் அமெரிக்க அதிபர்.
இந்நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் வரிசையில் அமெரிக்காவும் கொரோனா தொற்றினால் வேகமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 85000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 1300பேர் உயிரிழந்துள்ளனர் என்கின்றன அந்நாட்டு ஊடகங்கள்.
இந்தநிலைமையில், அனைத்து நாடுகளையும் முந்திக்கொண்டு அமெரிக்காவில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வருவதால், வேறு வழியில்லாமல் சீனாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,
"சீனாவின் அதிபர் ஷியுடன் ஒரு நல்ல உரையாடலை முடித்தேன். எங்கள் நாட்டின் பெரும் பகுதிகளை அழிக்கும் கொரோனா வைரஸ் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
சீனா அதிக அனுபவம் பெற்றுள்ளது மற்றும் வைரஸைப் பற்றிய வலுவான புரிதலை உருவாக்கியுள்ளது. மிகவும் மரியாதையுடன் நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேற்குலக நாடுகள் ட்ரம்பின் இந்த டுவிட் தொடர்பில் கேலியாக பேசியுள்ளதுடன், அமெரிக்க அதிபரின் முன்னைய திமிர் பேச்சு தொடர்பிலும் பேசி வருகின்றன.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |