Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கப்பல்களுக்கு நுழைவு மற்றும் தாமதக் கட்டணங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது

நாட்டின் துறைமுகங்களுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களுக்கும் நுழைவு மற்றும் தாமதக் கட்டணங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில், துறைமுகங்களுக்குள் பிரவேசிக்கும் கப்பல்களுக்கு தேவையான வசதிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் துறைமுக அதிகார சபையின் தலைவர் தயா ரத்நாயக்கவை மேற்கோள் காட்டி ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்து துறைமுக சேவைகளையும் வழமை போன்று முன்னெடுப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு குறித்த வர்த்தகர்களுக்கு தேவையான நிவாரணங்களை துறைமுக வளாகத்திலேயே பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments