உலகையே தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவில் தான் முதன் முதல் ஆரம்பமாகியது. வுகான் மநிலத்தில் ஆரம்பித்த கொரோனா தற்போது 80,000 ஆயிரம் பேருக்கு தொற்றியுள்ள நிலையில். வுகானில் உள்ள 14 தற்காலிக வைத்தியசாலைகளை சீனா மூடியுள்ளது. ஏன் எனில் சுமார் 50,000 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளதோடு. மீதமுள்ளவர்கள் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் சொல்லப்போனால் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது 90% சதவிகிதத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இதனை அடுத்து வுகான் மாநிலத்திற்கு சீன அதிபர், விஜயம் ஒன்றை மேற்கொண்டு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வழியாக நோய் தொற்றை முற்றுறாக சீனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால் இங்கே ஆரம்பித்த இன் நோய் தோற்று, தற்போது உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. இத்தாலி எடுத்துள்ள முடிவு வரவேற்க்கத் தக்கது.
அன் நாடு சீனாவைப் போல பல மாநிலங்களை லாக் டவுன் செய்துள்ளது. ஆனால் லண்டனில் இன்னும் அந்த நடைமுறை வரவில்லை.



0 Comments