Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரோனா முகாமிற்கு எதிராக வீட்டுக்குள் முடங்கும் போராட்டத்திற்கு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு அழைப்பு


மட்டக்களப்பு - புணானை பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டவர்களை கொரோனா பரிசோதனைக்காக தங்கவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் மோகன் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் மட்டக்களப்பு புணானை பல்கலைக்கழகத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனர்.
இதில் நோய் தொற்று இருப்பவர்களை கண்டறியப்பட்டால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எமது நாட்டு பிரஜைகள் எவராவது பாதிக்கப்பட்டால் அவர்களை காப்பாற்ற வேண்டிய தார்மிகத் தேவை எல்லோருக்கும் உள்ளது. அதேவேளை தொற்று வேகமாக பரவி வரும் நாட்டு பிரஜைகளை இங்கு அனுமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எமது மட்டக்களப்பு மாவட்டம் சகலவழிகளிலும் பின் தள்ளப்பட்ட மாவட்டம் இங்கு ஒருவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் எமது மட்டக்களப்பு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு, நினைத்து கூட பார்க்க முடியாத நிலைக்குச் சென்றுவிடும்.
எனவே இச்செயற்பாட்டை அனுமதிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தி எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடக்கப்படும் வகையில் எல்லோரும் வீட்டிற்குள் முடங்கி எமது எதிர்ப்பினை வெளிகாட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இது நோயளர்களை எதிர்கும் நடவடிக்கை அல்ல, மாறாக எமது மாவட்டத்தையும், மக்களையும் பாதுகாப்பதற்காக நாம் எடுக்கும் உத்திகளில் ஒன்றேயாகும்.
உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் நலன் பெற இறைவனை வேண்டி பிராந்திப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments