நூருல் ஹுதா உமர்.
அக்கறைப்பற்றான் அவர் உங்களுக்கு ஒன்றும் தரமாட்டார் என்று பொத்துவிலிலும் கல்முனையில் நான் கொடுத்தவற்றை நானே அள்ளிக்கொண்டு சென்றதாகவும், சிலகாலம் சம்மாந்துறையிலும் பொய்யாக பேசி அரசியல் செய்தார்கள். எம்மவர்களிடம் ஊர்வாதமும், இனவாதமும் உடனடியாக பற்றிக்கொள்ளும். படிக்காத முஸ்லிங்களுக்கு வாக்குரிமை வழங்கவேண்டாம் என சார் பொன்னம்பலம் ராமநாதன் போன்றோர்கள் அன்று பேசியது சரிதானா என சிந்திக்கும் அளவுக்கு தற்கால முஸ்லிம் சமூகத்தின் போக்குகள் இருக்கிறது என தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
இன்று (08) மாலை பொத்துவிலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிகையில் ,
ஏனைய அரசியல் கட்சிகளின் கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்கள் தேசிய காங்கிரஸுடன் இணைய ஆயத்தமாகி வருகிறார்கள். முஸ்லிம் காங்கிரசில் நாங்கள் இருந்த போது எங்களுடன் பயணித்தவர்களுடனான உறவு புதுப்பிக்கப்பட்டு வருகிறது எனலாம் . பலருடைய கொள்கைகளும், பலருடைய அரசியல் விடயங்களும் பக்கத்தில் இருந்து பார்க்கும் போதுதான் தெளிவாக தெரியவரும் அதன் அடிப்படையில் எமது இளைஞர் சமூகம் சரியாக புடம்போடப்பட வேண்டும் என்பதை உணர்ந்து இப்போது எங்களுடன் இணைய முன்வந்துள்ளார்கள்.
பல காங்கிரஸிலும் பிரிந்து தம்மை அறிந்து கொண்டவர்கள் இப்போது தேசிய காங்கிரசின் ஆளுமையை அறிந்து இப்போது எம்மோடு இணைந்துள்ளார்கள். இவர்களே இனி கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள். இந்த மக்களை ஏமாற்றியவர்கள் பற்றி பேசுவதற்க்கு இனி நான் தேவையில்லை. இவர்களே போதுமானவர்கள். இந்த நாட்டு மக்களை நிம்மதியாக வாழவைத்தால் மட்டுமே தான் நமது முஸ்லிங்களை நிம்மதியாக வாழ வைக்க முடியும்.
கல்முனை பிரச்சினை, சாய்ந்தமருது பிரச்சினைகள் பற்றி பேசும் பிரதமருடனான கலந்துரையாடலில் எல்லைகள் போடப்படும் போது தமிழர்களினதோ அல்லது முஸ்லிங்களினதோ கூரைக்கு மேலால் போட முடியாது என்பதை தெளிவாக விளக்கியுள்ளோம். எமது எண்ணங்களை தெளிவாக அரசுக்கு கூறிவைத்துள்ளோம். நான்கு சபைகளையும் பிரித்து நான்கு பிரதேச செயலகங்களை உருவாக்க வேண்டும். அரசியலுக்காக இனவாதம் பேசி பயனில்லை. இந்த பிரதேச மக்களின் தேவைகளை பெறுவதில் நாங்கள் நியாயமாக நடக்க வேண்டும். எமது பதவிகளை கொண்டு நமது மக்களை நிம்மதியாக வாழவைக்க வேண்டும்.
பொத்துவில் கல்வி வலயம் எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும். பொதுத்துவில் பிரதேச இணைத் தலைவராக இருந்து பொத்துவில் கல்வி வலய உருவாக்கத்தின் வேலைகளை அப்போதே செய்து முடித்திருந்தேன். எங்களின் தேசிய காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்களை கொண்டு பிரேரணைகளை கூட கொண்டுவந்திருந்தேன். அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கூட இதுசம்பந்தாக முடிவு செய்ய வைத்தேன். அன்றிருந்த கல்வியமைச்சர் பந்துல குணவர்தன அவர்களை நேரடியாக பொத்துவிலுக்கு அழைத்துவந்து இதுசம்பந்தமாக பேசினோம் ஆனால் ஒன்றும் நடைபெற வில்லை. அரசியல் விபச்சாரம் செய்த அவர்கள் அக்கறைப்பற்றான் அவர் உங்களுக்கு ஒன்றும் தரமாட்டார் என்று பொய்களை கூறியே வாக்கெடுத்தார்கள்.
அக்கறைப்பற்றான் அவர் உங்களுக்கு ஒன்றும் தரமாட்டார் என்று பொத்துவிலிலும் கல்முனையில் நான் கொடுத்தவற்றை நானே அள்ளிக்கொண்டு சென்றதாகவும், சிலகாலம் சம்மாந்துறையிலும் பொய்யாக பேசி அரசியல் செய்தார்கள். எம்மவர்களிடம் ஊர்வாதமும், இனவாதமும் உடனடியாக பற்றிக்கொள்ளும். படிக்காத முஸ்லிங்களுக்கு வாக்குரிமை வழங்கவேண்டாம் என சார் பொன்னம்பலம் ராமநாதன் போன்றோர்கள் அன்று பேசியது சரிதானா என சிந்திக்கும் அளவுக்கு தற்கால முஸ்லிம் சமூகத்தின் போக்குகள் இருக்கிறது.
நாட்டை பற்றி சிந்திக்காமல் பணத்திற்க்கு சோரம் போன மக்களும், சில ஊடகங்களும், சில ஊடகவியலாளர்களும் சேர்ந்து நமது மக்களுக்கு இனவாதத்தையும், பிரதேசவாதத்தையும் விதைத்து நாட்டை காட்டிக்கொடுத்து விட்டார்கள்.
எனது கட்சி விடயமாக வந்த பொத்துவில் தேசிய காங்கிரஸ் அமைப்பாளர் அவர்களின் குழுவினர் இதுசம்பந்தமாக என்னிடம் நினைவுபடுத்தி பேசியபோது இப்படி தான் நடைபெற்றிருக்க வேண்டும் எனும் எனது நிலைப்பாட்டை விளக்கியிருந்தேன். இது கொள்கை சார் விடயமாக மாறும்வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினேன்.
பிரதமருடனான கல்முனை மாநகர விடயம் சார் கலந்துரையாடலில் உதாரணம் காட்டுவதற்காக நான் இந்த பிரச்சினையை பேசினேன். அக்கறைப்பற்று வலயத்திலிருந்து திருக்கோவில் வலயம் பிரிக்கப்பட்டது. அக்கறைப்பற்று வலயத்தின் அருகாமையில் இருக்கும் ஆலையடிவேம்பு வலயத்தை திருக்கோவிலுடன் இன ரீதியாக இணைத்தார்கள். அவர்களுடைய ஆசைக்காக நாங்கள் விட்டுக்கொடுத்தோம். ஆனால் கொடுத்திருக்க வேண்டியது பொத்துவிலுக்கே. பொத்துவில் மக்கள் இந்த வலய தேவைக்காக அன்றிலிருந்து இன்றுவரை போராடி வருகிறார்கள். அதனை மதித்து உப காரியாலயம் அமைத்து இவ்வளவு முயற்சிகள் எடுத்த பின்னும் ஏன் இது இன்னும் நடக்கவில்லை என்பதை பேசினோம்.
பிரதமரிடம் நான் சொன்னேன், எனக்கு புரிகிறது. பொத்துவில் பிரதேச சிங்கள மொழி பாடசாலைகளை அம்பாறை வலயத்துடன் சேர்த்திருக்கிறீர்கள். பொத்துவில் பிரதேச தமிழ் பாடசாலைகளை திருக்கோவில் வலயத்துடன் இணைத்துள்ளீர்கள்,. அப்படியாயின் கல்வியிலையே நாம் பிரிவினைவாதத்தை ஆரம்பித்து விட்டோம் என்று. தமிழர்,முஸ்லிம்,சிங்களவர் என்று நாம் பிரிந்துவிட்டோம். பொத்துவில் காரியாலயத்தில் ஏன் நாம் ஒற்றுமையாக இருக்க முடியாது. பின்னர் அவரை நான் தனியாக சந்தித்த போது இந்த வலயத்தை கொடுப்பதற்கான பணிகளை ஆரம்பிக்குமாறு எனக்கு பணித்துள்ளார் என்றார்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள், ஆதரவாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என பலரும் தேசிய காங்கிரசின் கொள்கைகளை ஏற்று தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டனர்.
0 Comments