நூருல் ஹுதா உமர்
இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான சுதந்திர தின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை அக்கரைப்பற்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு பிராந்திய முகாமையாளர் காரியாலய அருகாமையில் அமைந்துள்ள ஐக்கிய சதுக்க நீர்தடாக முன்றலில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி தலைமையில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று மாநகரம் தேசியக் கொடியால் அழகுபடுத்தப்பட்டும், அக்கரைப்பற்றில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டும், விழா நடைபெறும் Water Park அலங்கரிக்கப்பட்டு காணப்பட்டது இவ்விழாவின் சிறப்பம்சமாக காணப்பட்டது.
இச்சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கலந்து கொண்டு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். விசேட அதிதிகளாக தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள், உள்ளுராட்சிமன்ற தலைவர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், அக்கரைப்பற்றிலுள்ள அனைத்து அரச, தனியார் நிறுவனங்களின் பிரதானிகள், பொலிஸ், முப்படை உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள் இளைஞர் அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள், பொது நிறுவனங்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் முக்கிய பல பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
0 Comments