Home » » நாட்டிலுள்ள சகல இன மக்களும் இலங்கையர் என்ற ஒரே கொடியின் கீழ் அணி திரண்டால் தான் எதிர்கால இலங்கையை சுபீட்சமாக கொண்டு செல்ல முடியும்.

நாட்டிலுள்ள சகல இன மக்களும் இலங்கையர் என்ற ஒரே கொடியின் கீழ் அணி திரண்டால் தான் எதிர்கால இலங்கையை சுபீட்சமாக கொண்டு செல்ல முடியும்.

(அஸ்ஹர் இப்றாஹிம் )

 

இவ்வாறு சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இலங்கையின் 72வது சுதந்திர நிகழ்வில் உரையாற்றிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.
அவர் தொடந்து கருத்து  தெரிவிக்கையில் , 

எமது இலங்கை திரு நாடு சகல இன மக்களும் வாழும் ஒரு இடமாகும்.  நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் முஸ்லீம்கள் , தமிழர்கள் பரந்து வாழுகின்றனர். இருந்தும் இந்த நாட்டில் சில சட்ட திட்டங்கள் இருக்கின்றது.  சிங்கள மக்கள பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் மிகவும் கவனமாக தமது அன்றாட பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எந்த வேளையிலும் இனங்களுக்கிடையில் முறுகல் நிலமையை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் சில துரோகிகளும் அரசியல்வாதிகளும் தமது கைங்கரியத்தை நிறைவேற்றுவதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
நாட்டில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற சில அசாதாரண நிகழ்வுகளின் பின்னணி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் .
நாட்டிலுள்ள சகல இன மக்களும் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஸ அவர்கள் பலவிதமான முன்னேற்றகரமான திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றார். அவருக்கு இலங்கையிலுள்ள முஸ்லீம் மக்கள் பக்க பலமாக இருந்து நாட்டின் அபிவிருத்திப் பணியினை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்மால் ஆன அனைத்து  பங்களிப்புகளையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |