( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருதைச் சேர்ந்த நாஸிக் அஹமத் அரச அங்கீகாரம் பெற்ற தேசிய அரச கரும மொழிப் பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் அமைந்துள்ள அரசகரும மொழிகள் திணைக்களமும்
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் அமைந்துள்ள அரசகரும மொழிகள் திணைக்களமும்
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடாத்திய, எழுத்துப் பரீட்சையிலும், நேர்முகப் பரீட்சையிலும் சித்தியடைந்து, அரச ஊழியர்களுக்கான, அரச கரும மொழித் தேர்ச்சிக்கான பயிற்றுவித்தல், இன ஒற்றுமையையும், சமூக ஒருமைப்பாட்டையும் மற்றும் நல்லிணக்கத்தையும் சகோதர இனங்களுக்கு மத்தியில் ஏற்படுத்துதலுக்கான, அரச அங்கீகாரம் பெற்ற தேசிய அரச கரும மொழிப் பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தற்போது பொத்துவில் அல் - கலாம் மகா வித்தியாலயத்தில் சிங்கள மொழிப் பாட ஆசிரியராகவும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற சிங்கள சான்றிதழ் (Certificate in Sinhala) பாடநெறிக்கான வருகைதரு போதனாசிரியராகவும் சேவையாற்றுகிறார்.
0 comments: