கடும் வெப்ப நிலை காரணமாக பாடசாலை மாணவர்களை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் தற்போது விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்போது பகல் வேலைகளிலும் பயிற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டே கல்வி அமைச்சு இந்த அறிவுறுத்தலை பாடசாலை நிர்வாகங்களுக்கு விடுத்துள்ளது.
0 comments: