மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகளை ஆராயும் வண்ணம் இன்று காலை வைத்தியசாலை சமுகத்துடன் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இச்சந்திப்பில் தாதியர் பாடசாலையில் நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்ததுடன் அதற்கான தீர்வினை பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு உரிய நடவடிக்கையினை துரிதமாக செய்து தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டதற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது
மட்டக்களப்பு தாதியர் பாடசாலையில் சிரேஷ்ட தாதிய போதனாசிரியர்கள் தற்போது நான்கு பேர் மாத்திரம் பணியாற்றி வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்வதற்கு வெளிமாவட்டத்தில் இருக்கின்ற உத்தியோகத்தர்களை தற்காலிகமாக நியமிக்கும்படி தாதியர் கல்லுரியின் அதிபர் ஏ.எம்.ரி.வி அதிகாரி வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தார் கருணா.
தற்போது இலங்கையில் பத்து தாதிய பாடசாலைகளில் நடைபெற்று வருகின்ற விடுதி முகாமைத்துவ மேற்பார்வைக்கான டிப்ளோமா கற்கை நெறியினை ஆரம்பிப்பதற்கான அடிப்படைவசதிகள் அற்ற நிலை பொளதீகவளங்களின் பற்றாக்குறை தொடர்பாக அமைச்சருடன் உரையாடி தீர்வு எட்டப்படவுள்ளதாக இதன்போது கருணா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொது ஐக்கிய தாதியர் சங்கத்தின் கிழக்கு மாகாண தலைவர் நா.சசிகரன் மற்றும் தாதிய கல்லுரி அதிபர் ஏ.எம்.ரி.வி அதிகாரி மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டத்தைச் சார்ந்த விடுதி முகாமைத்துவ மேற்பார்வைக்கான டிப்ளோமா கற்கைநெறிக்கு தெரிவான தாதிய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



0 comments: