Advertisement

Responsive Advertisement

யானை தாக்கி உயிரிழந்தவரின் சடலம் 2 நாட்களுக்குப் பின் மீட்பு! [

மட்டக்களப்பு - கிரான், தரவை காட்டுப் பகுதியில் யானை தாக்கி உயிரிழந்தவரின் சடலம் இரண்டு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை வீதி, செங்கலடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சவேந்திரன் (வயது 39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
    
கடந்த 9ம் திகதி வயல் காவலுக்காக சென்ற நபரை தரவை காட்டுப் பகுதியில் இருந்து வந்த யானை தாக்கி காட்டுப் பகுதிக்குள் தூக்கி எறிந்துள்ளது. இதன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments