Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் - காரணம் -

கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பாடசாலை தவனை காலங்களின் போது ஆசிரியர் இடமாற்றங்களை முன்னெடுக்க வேண்டாம் என நாடளாவிய ரீதியிலுள்ள பல தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் பாடசாலை தவனை காலங்களின் போதுஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம் கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் இந்த ஆண்டுக்கான ஆசிரிய இடமாற்றங்களுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் திகதிபிறகு அறிவிக்கப்படும். எவ்வாறாயினும் ஆசிரியர் இடமாற்ற சபையின் கூட்டம் நிறுத்தப்படாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

எதிர்வரும் காலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கான புதிய செயலி (APP) ஒன்றை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதுடன், இதன் ஊடாக ஆசிரியர்களுக்கு மிகவும் இலகுவானதும் சீரான முறைமையுடனும் கூடிய வகையில் தனது ஆசிரிய இடமாற்றம் தொடர்பான தகவல்களை வெளிப்படையாக புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments