யாழ் மாவட்டத்திற்கு மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டமைக்கு தமிழரசுக் கட்சியின் பத்திரிகை ஒன்று கிழக்கு மாகாணத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்களை வடக்கில் நியமனம் செய்வதை சுட்டிக்காட்டியுள்ளது.
ரணில்-கூட்டமைப்பு ஆட்சியில் கிளிநொச்சி அரச அதிபராக மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரும் அதேபோல் வவுனியா மாவட்டத்திற்கு மூன்று தடவை தென்பகுதியை சேர்ந்த பெரும்பாண்மை இனத்தவரும் அவர்களை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரும் அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
கூட்டமைப்பு-ரணில் ஆட்சியில் வடக்கு மாகாணத்தில் சகல திணைக்களங்களிலும் சிற்றூளியர்களிலிருந்து உயர் பதவிகள் வரை பெரும்பண்மை இனத்தை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்ட வேளையில் குறித்த யாழ்ப்பாண தமிழரசுக் கட்சிப் பத்திரிகை தனது கட்சியினுடைய விசுவாசத்திற்காக மௌனம் காத்திருந்தது.
கூட்டமைப்பும் அவர்களது கட்சிப் பத்திரிகையும் தமிழ் மக்கள் நலனைப் பற்றித் துளியளவும் சிந்திக்காமல் தமது சுயலாப அரசியலுக்காக தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்துவதற்காக எமது தியாகங்கள் அத்தனையையும் குழிதோண்டி புதைத்துள்ளனர்.
அதிதீவிர தமிழ் தேசியம் பேசிக்கொண்டும் மறுபக்கத்தில் வடக்கு கிழக்கு பிரதேச வாதத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை கிழக்கு மாகாண மக்கள் தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
கிழக்கு பிரதேசவாதம் பேசும் தமிழரசுக் கட்சிப் பத்திரிகை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சம்பந்தன் அவர்கள் கூட்டமைப்பின் தலைவராக பதினெட்டு வருடங்கள் இருக்க முடியுமாயின் கிழக்கைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரிகள் ஏன் வடக்கில் மாவட்ட செயலாளர்களாக இருக்க முடியாது.
வடக்கு மாகாணத்தில் இருக்கும் இலங்கை நிர்வாக சேவை தரம்-1ல் இருக்கும் தமிழர்கள் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேவேளையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக வடபகுதியை சேர்ந்த அரச அதிகாரிகள் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் பல பதவி நிலைகளிலும் தமிழர்கள் இருந்திருக்கின்றார்கள் தற்போதும் இருக்கின்றார்கள்.இவற்றை புரிந்து கொள்ளாமல் தமிழரசுக் கட்சியின் பத்திரிகை தமிழ் மக்களிடம் வடக்கு-கிழக்கு என்று தமது சுயநல அரசியலுக்காக பிரதேசவாதத்ததை தூண்டி விடுவதை யாரும் ஏற்றுக்கொள் முடியாது.
நல்லாட்சியில் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கும் மாற்று சமூகத்தினருக்கும் வடக்கு நோக்கி நியமனங்கள் வழங்கப்படும்போது தமிழரசுக் கட்சியும் அவர்களது கட்சிப் பத்திரிகையும் ஏன் சுட்டிக்காட்டவில்லை கிழக்கு மாகாண மக்களே இவர்களது சந்தர்ப்பவாத இரட்டைவேட அரசியலை இனங்கண்டு அதற்கேற்றாற் போல் செயற்பட வேண்டும்.

0 Comments