Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.முஹம்மட் அஸ்கி



( அஸ்ஹர் இப்றாஹிம் )

கல்முனை பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் ஏ.எல்.முஹமட் அஸ்கி 
பெரும்பான்மையான வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளார்.

கல்முனைக்குடி நகர மண்டப வீதியைச் சேர்ந்த அஹமட்லெப்பை முஹம்மட் அஸ்கி சிறுவயது தொடர்க்கம் இன்று வரை பல்வேறுபட்ட சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் இளைஞர்களுக்கான சாத்தியமாய் சாமர்த்தியமாய் 3 வெற்றிகரமான இளைஞர் முகாம்களை நடாத்தி வெற்றிகண்டவர்

கல்முனை பாக்கியதுஸ் ஸாலிஹா மஸ்ஜித்தில் யூத் வித் டலன்ட் வேலைத்திட்டம் ஊடாக பைசிக்கல் தரிப்பிடம் மற்றும் கழிவுக்குழி அமைத்து கொடுத்துள்ளார்.

அத்தோடு வெற்றிகரமான நான்கு பிரதேச விளையாட்டு போட்டிகளுக்கு தலைமை தாங்கி அதனை சிறப்பாக வழிநடாத்தி வெற்றி கண்டவர்

மேலும் இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு, யொவுன் புர நிகழ்ச்சியில் எமது பிரதேச இளைஞர்களை இணைத்து பயிற்சி வழங்கல் போன்ற இன்னும் பல நிகழ்வுகளை முன் நின்று நாடாத்தி கல்முனை இளைஞர்களை ஒன்றிணைத்தவர்

Post a Comment

0 Comments