Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நிந்தவூரில் உணவகங்களில் சோதனை : பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி !!



நூருல் ஹுதா உமர். 

நிந்தவூர் பிரதேச உணவங்களில் (22) இன்று மாலை திடீரென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வசீரின் தலைமையில் இயங்கும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இந்நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.  இந்நடவடிக்கைகளின் போது எவ்வாறு உணவுப் பொருட்களை கையாள வேண்டும் என்பதையும் உணவகங்களின் சுகாதார நிலைகளின் மேம்பாடு பற்றியும் உணவக உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு தெளிவாக விளக்கினர். 


உணவகங்களின் சுகாதார நிலைகளை சரியாக பின்பற்ற மறுக்கின்ற அல்லது பொடுபோக்காக இருக்கின்ற உணவக உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  எச்சரிக்கை விடுத்தனர்.

Post a Comment

0 Comments