எம்.வை.அமீர்,யூ.கே.காலித்தீன், எம்.ஐ.எம்.அஸ்ஹர்
அண்மைக்காலமாக சாய்ந்தமருது, இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாட்டாளர்கள் பல்வேறுவகையான முன்னெடுப்புக்களை செயற்படுத்திவரும் நிலையில், சாய்ந்தமருது மக்கள் மத்தியில் குறித்த அமைப்பின் செயற்பாடுகள் பாராட்டப்பட்டுவரும் இன்றைய சூழலில், 2020.02.08 ஆம் திகதி அவர்களால் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்ட மருதூர் சதுக்கத்துக்கு மின்கம்பம் இட்டு மின்குமிழ்கள் பொருத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாட்டாளர்களான வைத்தியர் நாகூர் ஆரிப் உள்ளிட்ட குழுவினர் கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் அவர்களுடன் கேட்டுக்கொண்டதற்கினங்க பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், விரைந்து செயற்பட்டு இவர்களது கோரிக்கையை நிறைவேற்றியது மட்டுமல்லாது களத்துக்கு வருகைதந்து தன்னுடைய ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.
சாய்ந்தமருது மக்கள் ஒன்றுகூடி தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள புறம்பான இடம் ஒன்று இல்லையென்ற குறை சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தினரின் முயற்சியில் ஒவ்வொருநாளும் வித்தியாசமான விஸ்பரூபம் எடுத்து வருகின்றது.
இன்றைய நிகழ்வின்போது சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாட்டாளர்கள் பலரும் வருகைதந்திருந்தனர். அத்துடன் கிழக்கு நற்புறவு ஒன்றியத்தின் பிரதானிகளும் பங்குகொண்டிருந்தனர்.
மருதூர் சதுக்கத்துக்கு ஒளியூட்டும் பணிகளை கண்காணிக்க வந்திருந்த கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் அவர்களை சந்தித்த மீனவர் குழு ஒன்று அவர்களது பிரதேசத்தில் மின்குமிழ்கள் எரியாமையால் ஏற்படும் தடங்கல்கள் தொடர்பான முறையிட்டபோது உடனடியாக செயற்பட்டு அவர்களது குறைகளையும் நிவர்த்தி செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments