Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அடுத்த மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும்! 25ம் திகதி பொது தேர்தல்

எதிர்வரும் வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு தான் எதிர்கட்சிக்கு யோசனை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய காலத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு அதிகாரம் அவசியம் என்பதனால் அதற்கு ஆதரவு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மார்ச் மாதம் நாடாளுமன்றத்தை கலைத்தால் தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும். அடுத்த வாரம் நாடாளுமன்றத்தை கலைப்போம். 15 நாட்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை பாதுகாத்துக் கொள்ள தடுமாற்றம் எதற்கு.
எந்த பலனும் இல்லை. எனவே உறுப்பினர் பதவிகளை பாதுகாக்காமல் தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மார்ச் இரண்டாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஆயுட் காலம் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைகின்றது. ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய, நாடாளுமன்றத்தை ஆறு மாதத்திற்கு முன்னர் கலைக்க முடியும்.
பொதுத் தேர்தலை ஏப்பிரல் மாதம் 23ஆம் திகதியில் இருந்து மே மாதம் 6ஆம் திகதிக்கு இடையிலான காலப்பகுதியில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments