Advertisement

Responsive Advertisement

இலக்கியவாதிகளின் பங்குபற்றலுடன் "சொற்களில் சுழலும் பிரபஞ்சம்" கவிதை தொகுதி இன்று மருதமுனையில் பிரசவமானது !!


நூருல் ஹுதா உமர். 

கவிஞர் டீன் கபூர் எழுதிய "சொற்களில் சுழலும் பிரபஞ்சம்" கவிதை தொகுதி வெளியிட்டு விழா இன்று (02) காலை கிடுகு குழுமத்தின் ஏற்பாட்டில் மருதமுனை பொதுநூலக கேட்போர் கூடத்தில் இலக்கியவாதியும் சுழலியலாளருமான தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அம்ரிதா ஏயெம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

கவிஞர் விஜிலியின் நெறியாள்கையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிஞர் ஏ.ஆபித் வெளியீட்டு உரையையும் கவிஞர் மருதமுனை ஜமீல் நூல் அறிமுக உரையையும் நிகழ்த்தினர். நூல் பற்றிய ஆய்வையும் இலக்கிய பரப்பின் இன்றைய போக்கையும் பற்றிய உரைகளை தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும், பிரபல இலக்கிய செயற்பாட்டாளருமான மன்சூர் ஏ காதிர், இலக்கிய செயற்பாட்டாளர் எம்.ஏ.ரஸாக், இலக்கிய செயற்பாட்டாளர் கே.எல்.நப்லா, இலக்கிய செயற்பாட்டாளர் கே. தனிஷ்கரன் ஆகியோர் நிகழ்த்தினர். 

 "சொற்களில் சுழலும் பிரபஞ்சம்" கவிதை தொகுதியின் முதல் பிரதியை  மக்கள் வங்கி நிந்தவூர் கிளை முகாமையாளர் பி.எம்.நஸ்ருதீன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நவாஸ், சரோ நிறுவன பிரதானி எம்.எச்.எம்.தாஜுதீன், கல்முனை பிரதேச செயலக கிராம அபித்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். முகர்ரப், கொழும்பு டைமண்ட் கண்ட்லூம் உரிமையாளர் யூ.எல்.எம்.இஃபால் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள்,முக்கிய பல இலக்கிய செயற்பாட்டாளர்கள், வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments