சீன மக்களின் உணவு முறைகளால் மட்டுமே கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது என அந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய மருத்துவ மாணவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
சீனாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் படிக்கும் இந்திய மாணவர்கள் 400 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் ஒருவரே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சந்திரசேகரன் ஆவார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது குறித்து சந்திரசேகரன் கூறுகையில்
சீனாவில் வவ்வால்களையும் பாம்புகளையும் சாப்பிடும் சீன மக்களுக்கு அது பரவியது. சுருக்கமாக சொல்லப் போனால் சீன மக்களின் உணவு பழக்க வழக்கத்தால் மட்டுமே இந்த நோய் பரவி வருகிறது.
சீனாவில் வுகான் மாகாணத்தில் உள்ள மீன் சந்தையிலிருந்து கொரோனா என்ற ஒரு வகை வைரஸ் பரவி வருகிறது. இது முதல்முதலாக கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது
எங்கள் கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தேன். ஓசூர் பகுதியில் தங்கி இருக்க வேண்டும்.
வரும் 21-ஆம் திகதி சீனாவிற்கு திரும்பி கல்லூரிக்கு வருமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது என்றார் சந்திரசேகரன்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகில் 17 நாடுகளில் பரவிவிட்டது. தமிழகத்திலும் அந்த நோய் பாதிப்புகள் இக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments