வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மூவர் காணாமல்போயுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், அச்சமான நிலையும் காணப்படுகிறது.
பத்து வயதுடைய இரண்டு சிறுவர்களும் 17 வயதுடைய ஒருவருமாக மூன்று பேர் இன்று (18) மாலை வேளையில் இருந்து காணாமல் போயுள்ளதாக, பருத்தித்துறைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பருத்தித்துறைப் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
குறித்த சிறுவர்கள் மாலை ஆகியும் வீட்டுக்கு செல்லாததையடுத்து ஊர் மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு ஊரின் பல இடங்களிலும் தேடியும் மூவரும் கிடைக்காததை அடுத்து, பருத்தித்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பருத்தித்துறை பொலிசார் தற்போது நாகர்கோவில் பகுதிக்குச் சென்று மீண்டும் அப் பகுதி மக்களுடன் இணைந்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.
கலியுகமூர்த்தி மதுசன் (10 வயது) புஸ்பகுமார் செல்வகுமார் (10 வயது) சந்தியோ தனுசன் (17 வயது - மனநலம் குன்றியவர்) ஆகிய மூவருமே காணாமல்போயுள்ளனர்.
0 comments: