Advertisement

Responsive Advertisement

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசியப் பொங்கல் விழா மட்டக்களப்பில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியப் பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

மண்முனை தென்மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் மாவட்டத் தலைமைகள், மட்டக்களப்பு மாநகர முதல்வர், பிரதி முதல்வர் உட்பட உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உறுப்பினர்கள்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகசபை, பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை இணைப்பாளர் நகுலேஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணித் தலைவர் லோ.தீபாகரன் உட்பட கட்சியின் பிரதிநிதிகள், பொது மக்கள், ஆலயங்களின் நிருவாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழரின் பாரம்பரிய பாண்பாடோடு பிண்ணிப்பிணைந்ததான பல்வேறு கலை நிகழ்வுகள் மற்றும் பட்டிமன்ற நிகழ்வு, சிறப்புரைகள் என பல்வேறு அம்சங்களுடன் சிறப்புற இப்பொங்கல் விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.











Post a Comment

0 Comments