எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன,
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை அடுத்து நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.இவ்வாறு உருவாகியுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியாதுள்ளது.
எனவே எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments