Advertisement

Responsive Advertisement

21 வயதுக்குட்பட்டவர்கள் கைபேசி பயன்படுத்த தடை! சமர்ப்பிக்கப்பட்டது மசோதா

கைபேசி பாவனையில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதிர்ச்சி கிடையாது எனவும் இந்த வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் கைபேசி பயன்படுத்த தடைவிதிக்குமாறு கோரி அமெரிக்க செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டள்ளது.
அமெரிக்க செனட் சபையில், வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜோன் ரோட்ஜர்ஸ் இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் சட்டவிரோதம் என அமெரிக்க அரசாங்கம் சட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
21 வயதுக்குட்டபட்டவர்கள் கைபேசி பாவனையில் முதிர்ச்சி அடையாத நிலையில் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.

Post a Comment

0 Comments