Home » » ஆசிரியர் சேவைக்கு இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் இணக்கம்

ஆசிரியர் சேவைக்கு இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் இணக்கம்



இடைக்கால சம்பள அளவுத்திட்டத்தை அமுல்படுத்தும் வரை - அதனை இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக புதிய கல்வியமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் - இதனை ஆரம்ப தற்காலிக தீர்வாக ஏற்க தொழிற்சங்கங்களும் இணங்கியுள்ளன எனவும் -  இணக்கம் காணப்பட்ட இந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதிக்குள் சுற்றுநிருபம் வெளியிடப்படவேண்டும் எனவும் - 
வெளியிடப்படாதவிடத்து -ஆசிரியர் அதிபர் தொழிற் சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த வருடம் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு வலியுறுத்தி மார்ச் 13 மற்றும் செப்ரெம்பர் 26,27 திகதிகளில் தொழிற்சங்கப் போராட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்காரணமாக - கடந்த மைத்திரி -ரணில் அரசாங்கத்தினால் சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய உபகுழு அமைக்கப்பட்டது. ஒக்டோபர் 29 ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் உபகுழுவுக்கும் இடையே நடந்த சந்திப்பை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் திகதி - ஆசிரியர் அதிபர் சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாக்கி அமைச்சரவை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதன்காரணமாக -  ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களும் கல்வியமைச்சும் இணைந்து முன்மொழிந்த சம்பளதிட்டத்தை ஆராய்ந்த ரனுகே ஆணைக்குழு -பரிந்துரைத்திருந்த சம்பளதிட்டத்தை நடைமுறைப்படுத்தும்வரை இடைக்கால சம்பள திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக - அப்போதைய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை - நடைமுறைப்படுத்த சம்பள ஆணைக்குழுவின் அனுமதிபெறவேண்டியிருந்த நிலையில் - நவம்பர் 14 இல் சம்பள ஆணைக்குழு கூடிய நிலையிலும் - முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை. 
இந்நிலையில் - நவம்பர் 16 இன் பின்னர் - தற்போதைய புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற நிலையில் - புதிய கல்வியமைச்சராக பொறுப்பேற்ற டலஸ் அழகப்பெருமாவுடன் 17.12.2019 ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்திருந்தனர்.
இதன்போது - இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறியவேண்டியிருப்பதாக கூறி புதிய கல்வியமைச்சர் கால அவகாசம் கேட்டிருந்தார்.
அதனடிப்படையில் - ஜனவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பதில் வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக கோரி கடிதம் அனுப்பியுமிருந்தது.
இதனடிப்படையில் - கடந்த 20 ஆம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது,
ஆசிரியர் அதிபர் சேவையை ஏனைய சேவைகளோடு சேர்க்காமல் அகப்படுத்தப்பட்ட சேவையாக்கினால் சம்பளம் அதிகரிக்க முடியும் என சம்பள ஆணைக்குழுவும் தற்போது தெரிவித்துள்ளது.
எனவே - தற்போதைய அரசாங்கமும் - டிசம்பர் மாதம் ஆசிரியர் அதிபர் சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாக்கி அமைச்சரவையில் தீர்மானித்துள்ள நிலையில் -
இடைக்கால சம்பள அளவுத்திட்டத்தை அமுல்படுத்தும் வரை - அதனை இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் தெரிவித்தார். இதனை தற்காலிக தீர்வாக ஏற்க தொழிற்சங்கங்களும் இணங்கியுள்ளன.
ஆயினும் - இணக்கம் காணப்பட்ட இந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதிக்குள் சுற்றுநிருபம் வெளியிடப்படவேண்டும் எனவும் - 
வெளியிடப்படாதவிடத்து ஆசிரியர் அதிபர் தொழிற் சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |