அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு சமகாலம் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த நடவடிக்கைகளுக்காக செல்லக்கூடிய கால எல்லையை தெரிவிக்க முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு நிறைவேற்று தரத்திலான அதிகாரிகளுக்கான கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் ஓய்வூதிய காரர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்தல் ஆகியவற்றை இடை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று சபையில் கேட்ட கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
நிலையியற் கட்டளை 27 / (2) இன் கீழ் கேட்டப்பட்ட இந்த கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவக்கையில் கடந்த அரசாங்கம் சமர்ப்பித்த இடைக்கால கணக்கறிக்கையின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய காரர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே அனைத்து சம்பள அதிகரிப்பையும் இடை நிறுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments