எம்.ஐ.எம்..அஸ்ஹர்)
பொத்துவில் தொகுதிக்குட்பட்ட மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளி பிரதேசங்களை சேர்ந்த சுமார் 500 இற்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவியுமான சட்டத்தரணி ஸ்ரீயாணி விஜயவிக்ரமவிடமிருந்து அதற்கான அங்கத்துவ அட்டையைப் பெற்றுக் கொண்டனர்.
மாளிகைக்காடு ஜாபிர் பௌண்டேசனின் 10 வருட நிறைவையொட்டி மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய மண்டபத்தில் இன்று ( 18 ) காரைதீவு பிரதேச சபையின் உதவி தவிசாளரும் , காரைதீவு முஸ்லிம் பிரதேசத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பளருமான ஏ.எம்.ஜாஹிர் தலைமையில் மிகப்பிரமாண்ட முறையில் ஒழுங்கு செய்திருந்த மேற்படி நிகழ்வில் வைத்தே இந்த பெண்கள் இணைந்து கொண்டனர்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , , அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவியுமான சட்டத்தரணி ஸ்ரீயாணி விஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களான கீர்த்திஸ்ரீ வீரசிங்க , எம்.எம்.எம்.ஸஹீல் , எஸ்.பி.சீலன் , காரைதீவு தமிழ் பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் வீ.கிறிஸ்ணமூர்த்தி , சாய்ந்தமருது பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் எம்.ஐ.எச்.ஜமால் , மருதமுனை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் சர்மில் ஜஹான் உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உறுப்பினர்களுக்கான அடையான அட்டை மற்றும் நியமனப்பத்திரங்களும் வழங்கப்பட்டன.
0 Comments