சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திண்மக்கழிவகற்றல் பிரச்சனைக்கு நிதந்தர தீர்வுகாணும் வகையில் சாய்ந்தமருது மத்தியில் அமைந்துள்ள தோணாவை அண்டியுள்ள பிரதேசங்களில் குப்பைகளை அகற்றும் பரீட்சாத்த திட்டம் நேற்று முதல் ( 19 ) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்தச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தங்கள் வீடுகளில் சேரும் திண்மக் கழிவுகளை கொண்டு வந்து, நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கல்முனை மாநகரசபை வாகனத்தில் போடுமாறு சாய்ந்தமருது பிரதேச கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.
இதே வேளை சாய்ந்தமருது தோணா பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களின் பொழுது போக்குப்பிரதேசமாக மாற்றுவதற்கான பல முயற்சிகளை பொதுமக்களின் பங்களிப்புடன் இளைஞர்களின் மனிதவலுவுடன் சாய்ந்தமருது பிரதேச கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மேற்கொண்டு வருவதுடன் இம்முயற்சிகளுக்கு பொது மக்கள் பெரும் ஆதரவினையும் வழங்கி வருகின்றனர்.
0 comments: