Advertisement

Responsive Advertisement

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பெண்கள் விடுதி கையளிக்கும் நிகழ்வு

(   எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி சபையின் பெரு முயற்சியினால் பீபில் லீசிங் மற்றும் பைனான்ஸ் நிறுவனத்தின் ( PLC )அஸ் ஸபா நிதிப்பிரிவின் கல்முனை கிளை ஊடாக அந் நிறுவனத்தின் சமூக கூட்டாண்மை பொறுப்புடனான ( corporate social responsibility _ CSR project )நிதியுதவியின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பெண்கள் விடுதி கையளிக்கும் நிகழ்வும் வைத்தியசாலையின் உத்தியோஸ்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று வைத்தியசாலை அபிவிருத்தி சபை பிரதித் தலைவரும் சம்மாந்துறை மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி டொக்டர் எம்.எச.கே.சனூஸ் காரியப்பர் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன் பிரதம அதிதியாகவும் , வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்லார் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் , வைத்தியசாலை உத்தியோஸ்தர்கள் ,வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments