Home » » அம்பாறையில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பில் மாவட்ட மட்டக்கூட்டம்

அம்பாறையில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பில் மாவட்ட மட்டக்கூட்டம்


அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் சம்பந்தமான மாவட்ட மட்டக்கூட்டம் இன்றைய தினம் அம்பாறை கச்சேரியில் நடைபெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சிமன்ற தலைவர்கள், திணைக்கள தலைவர்கள் பாதுகாப்பு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்கள உதவிப்பணிப்பாளர் எம்.எ.சி.எம்.றியாஸ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் தற்போதைய வெள்ள நிலைமை மக்களுக்கான சேவை தொற்றுநோய் பற்றியெல்லாம் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் வெகுவாக பாதிக்கப்பட்ட காரைதீவில் இதுவரை அரசினால் எவ்வித உதவியோ சமைத்த உணவோ வழங்கப்படவில்லை.

நாமாக அதனை வழங்குகின்றோம். வெள்ளநீரை கடலுக்குள் பிழையான இடத்தில் சில விசமிகள் வெட்டியமை தொடர்பில் சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்து பல நாட்களாகின்றன.

இன்னும் நடவடிக்கை இல்லை. மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் பயன்பட வேண்டும் என காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கே.ஜெயசிறில் கேட்டுக் கொண்டார்.

அனர்த்த உதவிப்பணிப்பாளர் றியாஸ் பதிலளிக்கையில்,

நாம் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு தரவுகளை எடுத்துள்ளோம். இனி நடவடிக்கை எடுப்போம் என்றார். பதிலுக்கு அடைமழை பொழிய ஆரம்பித்து இருவார காலங்களாகின்றன.

இன்னமும் தரவுகளை எடுத்துக்கொண்டிருந்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு எப்போது சமைத்த உணவு வழங்குவது? என்று பதிலுக்கு வினாத்தொடுத்துள்ளார்.

குறுக்கிட்ட அரச அதிபர் பண்டாரநாயக்க, உள்ளூராட்சி நிறுவனங்களும் பிரதேச செலகங்களும் இணைந்து மக்களுக்கான அவசர உதவிகளை சேவைகளை தாமதியாமல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.








Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |