Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை நகர் நாவிதன்வெளி பாதையை ஊடறுத்து பாயும் பெருவெள்ளம்!


அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும், கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளம் பாய்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் குறித்த வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளாந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ளம் பாய்ந்து வருவதால் கல்லோயா குடியேற்ற கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை, 4ஆம், 5ஆம், 6ஆம், 12ஆம் கொளனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 4,342 குடும்பங்களைச் சேர்ந்த 13,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 68 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,



கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 449 குடும்பங்களைச் சேர்ந்த 1449 நபர்களும், காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 181 நபர்களும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 05 குடும்பங்களை சேர்ந்த 26 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.












Post a Comment

0 Comments