Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக பொதுமக்கள் பாதிப்பு


அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் ஒரு வாரகாலமாக நீடித்த அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மண்டூர், நாவிதன்வெளி, சொறிக்கல்முனைச் சேர்ந்த பொதுமக்கள் கல்முனை நகருக்கு செல்வதற்கு பல சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
நாவிதன்வெளி பகுதியையும் கல்முனையையும் இணைக்கும் கிட்டங்கி பிரதான பாதையூடாக இந்த வருடம் மூன்றாவது தடவையாக வெள்ள நீர் பரவதொடங்கியுள்ளமையால் மக்கள் பெரும் அவலநிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த ஒரு வாரகாலமாக அம்பாறை மாவட்டத்தில் பெய்துவந்த மழை வீழ்ச்சியின் அளவு அதிகரித்துக் காணப்பட்ட போதிலும் தற்போது பெய்துவரும் மழை வீழ்ச்சியின் அளவு வெகுவாக குறைவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.











`

Post a Comment

0 Comments