Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் உள்ள ஆறுகள், குளங்களில் வெள்ளம் காரணமாக முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு! மக்களே அவதானம்!



மட்டக்களப்பு, கல்குடா தொகுதியிலுள்ள ஆறுகள், குளங்கள் போன்றவற்றில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளனவென, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜௌபர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, ஓட்டமாவடி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளிலுள்ள வீதிகள், குடியிருப்புகள், ஆற்று நீரோடு சேர்ந்துள்ளன. இதனால், குறித்த பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றன.

குறிப்பாக, காவத்தமுனை பகுதியிலுள்ள புதுவெளிப் பாலம், எப்பொழுதும் முதலைகள் நிறைந்து காணாப்படுகின்ற இடமாகும். குறித்த இடம் தற்போது நீரில் மூழ்கியுள்ளதால், இந்த இடத்தைப் பார்வையிட சிறுவர்களும் இளைஞர்களும் அதிகம் வருகை தருவதோடு, இந்த இடத்திடல் நீராடியும் வருகின்றனர்.

எனவே, குறித்த பகுதிகளுக்கு யாரும் வருகை தந்து நீராடுவதையும், தேவையற்ற நடமாட்டத்தில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென, பிரதேச சபை உறுப்பினர் வேண்டிக் கொண்டார்.

இதேவேளை, ஓட்டமாவடி பால ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவரை முதலை இழுத்துக்கொண்டு சென்றபோது அதனை கண்ட மற்றறையவர் பாதிக்கப்பட்டவரை கடும் போராட்டத்துக்கு மத்தியில் முதலையிடம் இருந்து காப்பாற்றியுள்ளர்.




Post a Comment

0 Comments