Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வெள்ளம் மேவிப் பாயும் வெருகல் பாலம்!

திருகோணமலை, வெருகல் பிரசித்திபெற்ற வெருகலம்பதி முருகனாலயம், வெள்ள நீரில் அகப்பட்டுள்ளதாக, பிரதேச செயலாளர் க.குணநாதன் தெரிவித்தார். அலயத்துக்கும் மாவடிச்சேனைக்குமிடையில் உள்ள நெடுஞ்சாலையை ஊடறுத்து ஓர் அடி உயரத்தில் வெள்ள நீர்பாய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மட்டக்களப்பு - திருகோணமலைக்கிடையில் பயணத்தை மேற்கொள்ளும் வாகனங்கள், பயணிகள் அவதானத்துடன் செல்லுமாறு, அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மகாவலி கிளைகளில் ஒன்றான வெருகல் கங்கையின் வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்நிலமை ஏற்பட்டுள்ளது. மாவடிச்சேனையில் பாயும் வெள்ள நிலமையால், கங்கையைச்சூழவிருந்த விவசாயிகள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனைப் பாடசாலையில் தங்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments