Home » » முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு இணைய சேவை மற்றும் தொலைபேசி கட்டணங்கள் குறைப்பு

முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு இணைய சேவை மற்றும் தொலைபேசி கட்டணங்கள் குறைப்பு

புதிய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரித் திருத்தங்களுக்கு அமைய அதன் நன்மைகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
வற், தொலைத்தொடர்பு வரி விலக்கு மற்றும் பிற வரி திருத்தங்கள் காரணமாக தொலைபேசி கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு இணைய சேவைக்காக இதுவரை அறவிட்ட வரி பெறுமதி நூற்றுக்கு 19.4 வீதத்தில் இருந்து 10.2 வரை குறைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சாதாரண தொலைபேசி அழைப்பிற்காக இதுவரை அறவிடப்பட்ட 37.7 வரி கட்டணம் நூற்றுக்கு 22.6 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முற்கொடுப்பனவு அட்டைகளுக்கான வரிப்பணம் குறைப்படவில்லை என வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதே கட்டணம் அறவிடப்பட்டாலும், கட்டணத்திற்கு பொருத்தமான டேட்டா அளவினை அதிகரிப்பதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |