Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபையின் பிரதான நிலையத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
நிலைமாறுகால நீதிக்காக எழுந்திடுவோம் எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வுகள் இன்று காலை நடத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு, கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் மற்றும் அதன் பெண் உதவி மையம் என்பன இணைந்து நிகழ்விற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அஸீஸ், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் புஹாரி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


நிலைமாறுகால நீதிக்காக எழுந்திடுவோம் என்ற கருப்பொருளை வெளிப்படுத்துவதற்காகவும், வலுப்படுத்துவதற்காகவும் தமது கைவிரல் அடையாளத்தினை பதிக்கும் நிகழ்வு இதன்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, மனித உரிமைகளுக்காக தமது இன்னுயிரை தியாகம் செய்தவர்கள் மற்றும் வன்முறைக்குள்ளாகி உயிர்நீத்தவர்கள் நினைவுகூரப்பட்டுள்ளனர்.
இதன்பின்னர் மனித உரிமைகள் தொடர்பாகவும், பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகள் தொடர்பாகவும் அரங்க செயற்பாட்டு மாணவர்களால் வீதி விழிப்புணர்வு நாடகமொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














Post a Comment

0 Comments