Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு தலைவரினால் நிவாரணம் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் நிலவும் பருவப்பெயர்ச்சி மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை பலர் வழங்கி வரும் நிலையில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளார் இரா.சாணக்கியன் அவர்களும் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றார்.
கடந்த காலங்களிலும் இந்த அமைப்பினால் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments