Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மூடப்படுகின்றன-மாநகர முதல்வர்

மட்டக்களப்பு மாநகர பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையங்களின் வகுப்பு நடவடிக்கைகள் அனைத்தும்  இன்று  (05.12.2019) முதல் நிறுத்தப்படுகின்றது  என்று மாநகர முதல்வர் தி.சரவணபவன் மாநகர சபை அமர்வில் தெரிவித்தார்.

நாடெங்கும் பெய்து வரும் மழை காரணமாக ஒரு சீரற்ற காலநிலை உருவாகியுள்ளது. இது மட்டக்களப்பிலும் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. எனவே இக்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் என்பவற்றை கருத்தில் கொண்டு இந்த விசேட பரிந்துரை சபையில் முன்வைக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.

மாநகர எல்லைக்கு உட்பட்ட தனியார் கல்வி நிலையத்தாருடன் கலந்துரையாடப்பட்டதுக்கு இணங்க வருகின்ற 20 ஆம் திகதி தொடக்கம் அடுத்த வருடம் தை மாதம் 05ஆம் திகதிவரை விடுமுறை விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் தற்போது நிலவி வருகின்ற அசாதாரண காலநிலையினை கருத்தில் கொண்டு இன்றிலிருந்து காலநிலை வழமைக்கு திரும்பும் வரை விடுமுறையினை தனியார் கல்வி நிலையங்கள் விட வேண்டும் என்று மாநகர முதல்வர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்படும்  வருகின்ற 20 ஆம் திகதி தொடக்கம் அடுத்த வருடம் தை மாதம் 05ஆம் திகதிவரை விடுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை எனவும் இதன் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments