Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழில் நேற்று குற்றுயிராய் கிடந்த இளைஞன் பலி! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

யாழ். கல்வியங்காடு பகுதியில் “கேமி” குழுவின் தலைவரின் சகோதரனை இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டி கொலை செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை கல்வியங்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியில் வெட்டு காயங்களுடன் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் வீசியதாக அதனைக் கண்ட அப்பகுதியிலுள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அந்த தகவலின் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் அந்த நபரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இதன்போது 26 வயதுடைய அஜித் என்ற இளைஞரே வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரத்தினால் ஏற்பட்ட முறுகல் நிலையினால், மற்றைய குழுவினர் கொலை செய்திருக்கலாமென பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கேமி குழுவின் தலைவரது மற்றொரு சகோதரனும், அவரது நண்பரும், பிறிதொரு இடத்திற்கு வாள் வெட்டை மேற்கொள்ளச் சென்ற போது, யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments