Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கின் புதிய ஆளுநரான சிங்களப் பெண் யார்? வடக்கின் ஆளுநராக முரளியை நியமிக்காதது ஏன்? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவின் சிங்கள முதலீட்டாளர்கள் மற்றும்தொழிலதிபர்களை உள்ளடக்கிய தேசியவாத தொழில்முனைவோர் அமைப்பின் தலைவரான அநுராதா யாம்பத் கிழக்கு மாகாண ஆளுநராகநியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிபீடம் ஏற்றுவதற்காக ஆரம்பம் முதல் செயற்பட்டுவந்த “வியத்மக” என்ற முன்னாள் படைத்தளபதிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்களை உள்ளடக்கிய அமைப்பின்முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகவும் முன்னணி ஆடை வடிவமைப்பாளரான அநுராத யாம்பத் செயற்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்காவின் அரச தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெற்றிடமாகவுள்ள இரண்டு மாகாணங்களுக்கானஆளுநர்களை நியமித்துள்ளார்.
இதற்கமைய கிழக்கு மாகாண ஆளுநராக அநுராதா யாம்பத் ஜனாதிபதிமுன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 
ஏற்றுமதி ஆடைக் கைத்தொழிற்சாலையொன்றின்உரிமையாளரான அநுராதா, முன்னணி ஆடை வடிவமைப்பாளருமாவார்.
சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துவரும் முக்கியநபராகவும் இருந்துவரும் நிலையில், சிங்கள பௌத்த தொழில் அதிபர்கள்,செல்வந்தர்கள் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள தேசியவாததொழில் முனைவோர் அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துவரும் 
நிலையிலேயே அநுராதா யாம்பத் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இதேவேளை வட மத்திய மாகாண ஆளுநராக இடதுசாரிக் கட்சியானலங்கா சம சமாஜக் கட்சியின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரணநியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வட மாகாணத்திற்கான ஆளுநராக இதுவரை எவரும்நியமிக்கப்படவில்லை. 
எனினும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள்நட்சத்திர சூழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் இன்றைய தினம்வட மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது.
எனினும் அதனை முத்தையா முரளிதரன் நிராகரித்ததால் இன்றையதினம் அந்த நியமனம் வழங்கப்படவில்லை என்று தகவல்கள்வெளியாகியுள்ளன.

you may like this

Post a Comment

0 Comments