Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை சவளக்கடை கிட்டங்கி வீதிக்கு குறுக்காக வெள்ளம்-உயிரை கையில் பிடித்து பயணம்!

அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக கல்முனை நற்பிட்டிமுனையூடாக கல்லோயா குடியேற்ற கிராமங்களுக்கு செல்லும் சவளக்கடை கிட்டங்கி பிரதான வீதிக்கு குறுக்காக வெள்ளம் பாய்ந்து வருகின்றது.

இதன் காரணமாக நாவிதன்வெளி பிரதேசத்திலிருந்து கல்முனை நகரிற்கும், கல்முனை நகரிலிருந்து நாவிதன்வெளி பிரதேசத்திற்கும் போக்குவரத்து செய்வதில் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர். இதேவேளை பரீட்சை கடமைக்காக செல்லும் ஆசிரியர்களும், நாவிதன்வெளி மற்றும் கல்முனை பிரதேசத்திலுள்ள அலுவலகங்களுக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்களும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இவ்வீதியூடாக பயணித்து வருகின்றனர்.


அம்பாரை மாவட்டத்தில் தொடர்ந்தும் பலத்த மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. கிட்டங்கி வீதியூடான போக்குவரத்து பாதிப்படையும் நிலையில் காணப்படுகின்றது.

பிரதான வீதிக்கு குறுக்காக பாயும் வெள்ளத்துடன் ஆற்றுவாழை செல்வதால் இவ்வீதியில் பயணிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments