Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு விளக்கமறியல்


முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
நாரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜிதவை கொழும்பு மேலதிக நீதவான் சற்று முன்னர் அங்கு சென்று கண்காணித்துள்ளார்.
இதன்போது கொழும்பு மேலதிக நீதிவானிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், ராஜித சேனரத்னவுக்கு பிணை வழங்கப்படும் பட்சத்தில் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனை கருத்திற் கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, ராஜித குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments