Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கி வைப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் வேண்டுகோளுக்கிணங்க ஏறாவூர் பற்று பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது 500 குடும்பங்களுக்கு 12 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் முனைப்பு நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை அடுத்த கட்ட நடவடிக்கையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு ஆடைகளும் வழங்கப்படவுள்ளதாக முனைப்பு சுவிஸ் தலைவர் மா.குமாரசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், அமைப்பின் தலைவர் மா.சசிகுமார் செயலாளர் இ.குகநாதன், பொருளாளர் அ.தயானந்தரவி உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.





Post a Comment

0 Comments