மட்டக்களப்பில் நேற்று மாலையில் இருந்து நிலவி வரும் மாசடைந்த வளியை அப்பகுதி மக்கள் பனி என நினைத்து கொண்டிருந்தார்கள்.
ஆனால், இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர அட்டவணையின் அடிப்படையில் AQI - Air Quality Index 150ஐ தாண்டியிருக்கிறது.
வளி மாசடைவு இலங்கையை தாக்கியமைக்கான காரணம் என்ன என்று இதுவரையில் தெரியவில்லை என சுற்றுச்சூழல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
வளி மாசடைதலானது கூடுதலாக பண்டிகைக் காலத்திலேயே அதிகரித்து காணப்படுகிறது எனவும், இதற்கான காரணம் பண்டிகை நாட்களை சிறப்புடன் கொண்டாட மக்கள் பட்டாசு கொளுத்துவதே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், வளி மாசடைதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.
வளி மாசடைதலில் இருந்து கிழக்கு வாழ் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் சிறுவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
தற்போது காற்றின் தர வரிசை அட்டவணையில் AQI 93 தான் காட்டுகிறது. ஆனால், காற்றின் தர அட்டவணை 100ஐ த் தாண்டினாலேயே ஆஸ்மா போன்ற நோயாளிகளுக்கு ஆபத்து என தெரிவிக்கப்படுகிறது.
AQI 150 தாண்டினால் எல்லோருக்கும் ஆபத்து. உயிர்க்கொல்லி நோய்கள் வருவது நிச்சயம். எனவே, இதைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்த நிலையில் மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபையின் காற்றின் தன்மை குறித்து ஆராயும் பிரிவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
0 Comments