Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும் நிறைவு


இலங்கை சோசலிச குடியரசின் 8ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் சர்வதேச வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியான மொத்த வாக்காளர்களாக 398,301 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவான சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு வயோதிபர்கள், விசேட தேவை உடையவர்களும், வாக்களிக்க தேவையான சகல வசதிகளும் மற்றும் வாக்கெடுப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் கடமைகளுக்கான பிரதம கணக்கெடுப்பாளர்கள், உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள், சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள், கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் ஏனைய கடமைகளுக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான ஏனைய அறிவூட்டல்கள் அனைத்தும் முடிவுறுத்தப்பட்டு அவர்களுக்கான நியமன கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளதாக மா.உதயகுமார் தெரிவித்தார்.


பாதுகாப்பு கடமைகளுக்காக 1688 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 320 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கணக்கெடுப்பு நிலையங்களுக்காக பாதுகாப்பு கடமைக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தவிர ரோந்துப் பணியில் விசேட பொலிஸ் பிரிவினர் பங்கெடுக்கவுள்ளனர்.
நாளை 15ஆம் திகதி வாக்குப் பெட்டிகள் கையளிப்பதற்கு என 54 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமைக்கு இணைக்கப்பட்டு செயற்படவுள்ளனர். அதனை தவிர வலயங்களுக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் அன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும்.
தேர்தல் பணியினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு குழுவின் சர்வதேச உள்நாட்டு கண்காணிப்பாளரின் தங்களது கண்காணிப்பு பணியினை ஆரம்பித்துள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் கூறியுள்ளார்.
இதுவரை 53 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 35 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 18 முறைப்பாடுகளுக்குரிய தீர்வு பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஆறு முறைப்பாடுகள் வன்முறைகளாகவும் 47 முறைப்பாடுகள் தேர்தல் விதி மீறுதல்களாகவும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments