தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், குறித்த நாட்களில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி மற்றும் போதைப்பொருள் உற்பத்தி, போக்குவரத்து, உடைமையை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என கலால்வரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், நாடு முழுவதும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1000இற்கும் அதிகமான அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments