( அஸ்ஹர் இப்றாஹிம் )
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று ( 3 ) பாடசாலை அதிபர் கே.தம்பிராசா மற்றும் பிரதி அதிபர்களின் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர் எஸ் உதயலிங்கம் அவர்களின் தலைமையில் பாடசாலை மாணவர் பாராளுமன்ற தேர்தல் குழுவின் பங்கேற்றலுடன் இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் ஜனநாயகம் , அதன் பொறுப்புக்களும் வகை கூறுதலும் என்பன பற்றியும் சட்டத்தின் ஆதிபத்தியம் , வாக்கு , வாக்களித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் ஆகியன பற்றிய செய்முறை அறிவைப் பெறுவதற்குரிய வழிகளைத் திறந்துஉரையாடல் , இணக்கப்பாடு , ஏனையோரின் கருத்துக்களுக்கு செவிமடுத்தல் மற்றும் பெரும்பாலானோரின் இணக்கப்பாட்டை ஏற்றுக் கொள்ளல் போன்ற திறமைகளையும் மனப்பாங்குகளையும் பாடசாலை மட்டத்திலிருந்து வழங்கும் நோக்கில் கல்வியமைச்சு நாட்டிலுள்ள சகல பாடசாலைகளலும் ” மாணவர் பாராளுமன்றங்களை அமைத்து அதனை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.
0 Comments