மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் யுகமொன்றை தான் ஏற்படுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர், முதல் தடவையாக ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஒன்றிணைந்த இலங்கைக்குள், பிளவுப்படாத இலங்கைக்குள் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து பிரஜைகளுக்கும் சலுகைகள், அபிவிருத்திகள், சௌபாக்கியம் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த இலங்கைக்குள் இயலுமான அதிகாரப் பகிர்வை வழங்க தயாராகவுள்ளதாக சஜித் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமன்றி எந்தவொரு தரப்பினதும் யோசனைகளை தான் செவிமடுக்கவில்லை, காரணம் இது அனைத்தும் தனது யோசனையே எனவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் அன்னச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக இன்றைய ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாஸ அறிவித்திருந்தார்.
0 Comments